பாராலிம்பிக் நீச்சல்
மதுரை: சென்னையில் தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டுச் சங்கம் 12வது மாநில பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. இதில் மதுரை வேலம்மாள் நீச்சல் அகாடமி மாற்றுத்திறனாளி வீரர் மகேஷ் 50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். தேசியப் போட்டிக்குத் தேர்வாகினார்.