உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ‘பார்க்கிங் குடோன்’

‘பார்க்கிங் குடோன்’

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை தீவிர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் ‘அண்டர் கிரவுண்ட் பார்க்கிங்’ பகுதியை சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை பாதுகாக்கும் கோடவுனாக ஊழியர்கள் மாற்றியுள்ளனர். ‘அண்டர் கிரவுண்ட்’ லிப்ட் பகுதியை ஒட்டி நோயாளிகளுக்கு பயன்படுத்திய சாய்வு வசதியுடன் கூடிய கட்டில், மெத்தை, அறுவை சிகிச்சை அரங்குக்கு பயன்படுத்திய டேபிள், லைட், கம்ப்யூட்டர் மானிட்டர், மருத்துவ உபகரணங்களை குவித்துக் கொண்டே வருகின்றனர். கார் பார்க்கிங் பகுதியில் நுாற்றுக்கணக்கான சேதமடைந்த கட்டில்கள் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றை மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியுமா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து இவற்றை முறையாக ஏலத்திற்கு விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !