| ADDED : பிப் 02, 2024 06:16 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் மதுபாலன் துவக்கி வைத்தனர்.மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் மக்கள் நடைபயிற்சி, யோகா, உடற்பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். இசையுடன் கூடிய நீரூற்றும் செயல்படுகிறது. இப்பூங்காவை கனரா வங்கியின் சி.எஸ்.ஆர்., திட்ட நிதியின் கீழ் பராமரிக்கும் பணி துவங்கியது. இதேபோல் பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொது கழிப்பறைகள், பூங்காக்களை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பராமரிக்கும் பணிக்கான பூமிபூஜையும் துவங்கியது. இப்பணிகளை விரைந்து முடிக்க மேயர், கமிஷனர் உத்தரவிட்டனர்.இந்நிகழ்வில் எம்.எல்.ஏ., பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் அரசு, உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார், ஷாஜகான், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.