உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயணிகள் சேவை தினம்

பயணிகள் சேவை தினம்

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் நேற்று பயணிகள் சேவை தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை டில்லியில் இருந்து வந்த இண்டிகோ விமான பயணிகளை வரவேற்கும் வகையில், நிலைய இயக்குனர் முத்துக் குமார், தமிழ்க் கலாச் சாரப்படி வணக்கம் தெரிவித்து, பயணிகளுக்கு திலகமிட்டு வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பயணிகள் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர்களுடன் இயக்குனர் முத்துக்குமார் கலந்துரையாடினார். வினாடி வினா, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. தொழில் பாதுகாப்பு படை உதவி கமாண்டர் கமல்சிங், பயண முனைய மேலாளர் சியாம் குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ