உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்தால் நடவடிக்கை; பயணியர் சங்கம் வலியுறுத்தல் 

ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்தால் நடவடிக்கை; பயணியர் சங்கம் வலியுறுத்தல் 

மதுரை; ''ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, தென்னக ரயில்வே பயணிகள் சங்கப் பொதுச் செயலாளர் பத்மநாதன் வலியுறுத்தினார்.ரயில்களில் டிக்கெட் இன்றி, வகுப்பு மாறி பயணித்தல், முன்பதிவு செய்யாது, முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பது அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து பயணிப்போர் அவதிக்குள்ளாகின்றனர்.ரயில் பயணிகள் 60 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு முன்பதிவு செய்தும், அவசரத் தேவைக்கு தட்கல், பிரீமியம் தட்கலில் முன்பதிவு செய்தும் பயணிக்கின்றனர். அவர்கள் மட்டுமே முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ய முடியும். ஆனால் முன்பதிவு செய்யாதோரும் அதில் பயணிக்கின்றனர். இதனால் அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.இதுகுறித்து பத்மநாதன் கூறியதாவது:முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, டிக்கெட் பரிசோதனை செய்ய ஆர்.பி.எப்., ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர்கள் அடங்கிய குழு, கோட்ட மேலாளர், வர்த்தக, உதவி வர்த்தக பிரிவு அதிகாரிகள் தலைமையில் செயல்பட்டது. பயணிகள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் பயணித்தனர். அதுபோன்று தற்போதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை