மேலும் செய்திகள்
ஊராட்சி செயலர்கள் இடமாற்றம்
17-Jul-2025
கொட்டாம்பட்டி: வலைச்சேரி பட்டி ஊராட்சியில் கணினி திருடு போனதால், கட்டணங்களுக்கு ரசீது பெற மக்களும், வசூல் பணம் செலுத்த ஊராட்சி செயலரும் அலைந்து திரிவதால் பணிகள் பாதிக்கின்றன.கொட்டாம்பட்டி - -தொந்திலிங்கபுரம் ரோட்டில் வலைச்சேரி பட்டி ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு வசிக்கும் 1200 பேர் தங்கள் வீடு, தொழில், குடிநீர் வரிகளுக்கு ஊராட்சி அலுவலகத்தில் பணம் கொடுத்து ரசீது பெறுவது வழக்கம். கடந்த மாதம் அலுவலக கணினி, பிரின்டர், கம்ப்ரஸர் பொருட்கள் திருடு போனது. எனவே ஊராட்சி செயலர் மக்களிடம் பணத்தை பெற்று மற்றொரு கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று இணையதளத்தில் பணம் கட்டுகிறார்..அப்பகுதி மக்கள் கூறியதாவது: அரசு ஆவணங்கள் பெற, ஆதார், பாஸ்போர்ட், ஜாமீன் உள்ளிட்ட தேவைகளுக்கு வீட்டு வரி ரசீது அவசியம். ஊராட்சி அலுவலகத்தில் கணினி திருடு போனதால் பணத்தை கொடுக்க ஒருநாளும், ரசீது பெற மற்றொரு நாளும் அலைந்து திரிகிறோம். பணத்தை செலுத்துவதற்காக ஊராட்சி செயலர் மற்றொரு ஊராட்சிக்கு செல்வதால் பணிகள் பாதிக்கிறது. ஒன்றிய அதிகாரிகள் கால தாமதமின்றி ரசீது வழங்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கணினி மற்றும் பிரின்டர் கேட்டு மனு கொடுத்துள்ளோம் என்றனர்.
17-Jul-2025