உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி

 அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா ஆலம்பட்டியில் இரு சமுதாய மக்களிடையே கோயில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ரோடு மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தனி மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆர்.டி.ஓ., சிவஜோதி, தாசில்தார் சுரேஷ், ஏ.டி.எஸ்.பி., ஆறுமுகம், டி.எஸ்.பி., தமிழ் செல்வம்,இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, சரவணன் மற்றும் ஆலம்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர். காலை 11:00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை மாலை 4:00 மணி வரை தொடர்ந்தது. இதில் பிரச்னைக்குரிய பகுதியில் கம்பி வேலி போடப்படும். மந்தை அம்மன் மற்றும் முத்தாலம்மன் கோயில் வழிபாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஒரு தரப்பு மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் மற்றொரு தரப்பினர் ஏற்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நடந்த நிலையில் நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டு கொள்வதாக கூறி அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ