உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பென்ஷனுக்காக பென்ஷன் கட்

பென்ஷனுக்காக பென்ஷன் கட்

மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., அன்பழகன் தலைமையில் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார். வழிகாட்டு அலுவலர் வெங்கடசுப்ரமணியம் உடனிருந்தார். மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. வாடிப்பட்டி அருகே சோலைக்குறிச்சி கிட்டு அம்மாள் 70, அளித்த மனு: எனது தந்தை வீரணபிள்ளை தியாகி பென்ஷன் பெற்று வந்தார். அவரது இறப்புக்குப் பின் வாரிசு அடிப்படையில் பென்ஷன் தொகையை பெற மனு கொடுத்தேன். இதனையடுத்து நான் பெற்று வந்த முதியோர் பென்ஷனையும் நிறுத்தி விட்டனர். ஓராண்டாக வருவாய் இன்றி தவிக்கிறேன். எனக்கு வாரிசு அடிப்படையில் தியாகி பென்ஷன் வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ