உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வூதியர் சங்க கூட்டம்

ஓய்வூதியர் சங்க கூட்டம்

திருநகர் : மதுரை திருநகரில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் திருப்பரங்குன்றம் வட்டக்கிளை பொதுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் தனபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் ஏர்னட்ஸ் தேவராஜ், கீதா, செயற்குழு உறுப்பினர் பிச்சுமணி, செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் நடராஜன், மாவட்ட இணை செயலாளர் நாராயணன் பங்கேற்றனர். துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தீர்மானங்கள் வாசித்தார். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் பேசினார். நிர்வாகிகள் கிருஷ்ணன், மீனாட்சிசுந்தரம், பானு பங்கேற்றனர்.அனைத்து அரசு பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை