மேலும் செய்திகள்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
13-Nov-2024
மதுரை; தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வூதியர் இயக்குனரகத்தை கருவூலத்துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். அரசாணை 343 ஐ ரத்து செய்து, ஓய்வூதிய இயக்குனரகத்தை தொடர்ந்து தனித்துறையாகவே செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் டேனியல் ராஜரத்தினம் தலைமை வகித்தார். செல்வராஜ், அப்துல் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத்துறை ஊழியர் சங்க முன்னாள் தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார்.மாவட்ட செயலாளர் மகாலிங்கம், அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் சோலையன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், வணிகவரி பணியாளர் சங்க இணை செயலாளர் கல்யாணசுந்தரம், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
13-Nov-2024