உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுநீர் கசிவால் தவிப்பில் மக்கள்

கழிவுநீர் கசிவால் தவிப்பில் மக்கள்

மதுரை: மதுரை தல்லாகுளம் மூக்கப்பிள்ளை சந்து பகுதி நெருக்கமான வீடுகள் நிறைந்த பகுதி. இங்கு மாநகராட்சி பள்ளி, குழந்தைகள் நலமருத்துவமனை உள்ளன. இச்சந்தில் சாக்கடை கால்வாயின் மேன்ஹோல் பகுதியில் இருந்து ஒன்றரை மாதமாக கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வியாபித்து நிற்கிறது. இதனால் பள்ளி குழந்தைகள், மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதியினர் கூறுகையில், ''மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் சரி செய்வதாக இல்லை. மழைக்காலம் துவங்கிவிட்டதால் தண்ணீருடன் கலந்து விடுகிறது. வீடுகள், பள்ளி, மருத்துவமனைக்குள் நுழைவோர் இக்கழிவு நீரில் மிதித்தவாறுதான் செல்கின்றனர். இதனை சரிசெய்ய விரைவான நடவடிக்கை தேவை'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !