உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் சுரங்கப்பாதை எப்போது அமைப்பார்கள் எதிர்பார்ப்பில் மக்கள்

குன்றத்தில் சுரங்கப்பாதை எப்போது அமைப்பார்கள் எதிர்பார்ப்பில் மக்கள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து எந்த முயற்சியும் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஸ்டேஷன் அருகே இருந்த ரயில்வே கேட் ரோட்டை பாலாஜி நகர், பாலசுப்பிரமணிய நகர், ஹார்விபட்டி, சந்திராபாளையம் பகுதி மக்கள் பயன்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட போது பாதுகாப்பு கருதி நிரந்தர இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் மேம்பாலத்தின் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என சர்வ கட்சியினர், வணிகர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தை திருமங்கலம் ஆர்.டி.ஓ., ஆய்வு செய்து ரயில்வே பொறியாளர்களிடமும் ஆலோசனை நடத்தினார். சுரங்கப்பாதை உடனடியாக அமைக்க முடியாது. அமைக்கும் வரை அடைக்கப்பட்ட ஒரு பகுதியை திறந்து விடுமாறு அறிவுறுத்தினார். மாணிக்கம் தாகூர் எம்.பி., ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஆகியோர் ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சருக்கும் கடிதம் எழுதினர். எந்த முயற்சியும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எப்போதுதான் குன்றத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்போகிறார்களோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி