சிப்காட்டுக்கு எதிராக மக்கள் வாக்குவாதம்
கொட்டாம்பட்டி: பொட்டப்பட்டியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் உதவி செயற்பொறியாளர் அழகேசன் தலைமையில் நடந்தது. மக்கள் சிப்காட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரினர். அதிகாரிகள் மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மனு கொடுத்தால் உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவதாக கூறினர். கூட்டத்தில் ஒன்றிய அதிகாரி பல்தேவ் சிங், ஊராட்சி செயலர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.