உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ்சுக்காக 2 கி.மீ., அலையும் மக்கள்

பஸ்சுக்காக 2 கி.மீ., அலையும் மக்கள்

கொட்டாம்பட்டி : கச்சிராயன் பட்டி நான்கு வழிச்சாலையில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது கல்லம்பட்டி. இக் கிராமத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன் தார் ரோடு போடப்பட்டது. காலப்போக்கில் போதிய பராமரிப்பு இன்றி ரோடு சிதிலமடைந்தது. அதனால் கிராமத்திற்குள் பஸ், ஆம்புலன்ஸ்கள் வர மறுப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: தார் ரோடு பெயர்ந்து ஜல்லிக்கற்களாக மாறியதால் டவுன் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்து கிடக்கிறோம். ஆனால் பஸ்கள் வரமறுக்கின்றன. இரண்டு கி.மீ., நடந்து பஸ் பிடித்து செல்கிறோம். ஆம்புலன்சும் வர மறுப்பதால் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழப்புகூட ஏற்பட்டுள்ளது. வெளியூர் சென்றவர்கள் இரவில் திரும்புவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. ரோடு, பஸ்வசதிக்காக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கலெக்டர் இவ்விஷயத்தில் தலையிட்டு புதியரோடு, அரசு பஸ் வசதி தரவேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sundar Pas
பிப் 12, 2025 09:56

15 வருடங்களில் பல தடவை ரோடு போட்டதாக கணக்கு காண்பித்து பணத்தை அட்டையை போட்ட ungal ஊர் பஞ்சாயத்து தல அல்லது சட்டமன்ற உறுப்பினரை போய் கேளுங்க மக்களே.


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 12, 2025 08:02

எங்கே அந்த டபுள் வாட்ச் டக்ளஸ்...அமெரிக்கா ல யே நம்பர் 1 அறிஞர் ஆயிற்றே! இன்னுமா தொகுதியை அமெரிக்கா போல மாற்றல?


நிக்கோல்தாம்சன்
பிப் 12, 2025 06:26

யாருக்கு வோட்டு போடீர்களோ அவர்களிடம் கேட்கப்படவேண்டிய கேள்வி , கலெக்டர் எழுந்து மரியாதை செய்யும் நிலையில் உள்ளது தமிழக ஆட்சி நிலவரம் , நீங்க தவறான இடத்தில் போயி நின்றாள் வேலை நடக்குமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை