உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

உசிலம்பட்டி; உத்தப்பநாயக்கனுார் உ.மாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் துறையில் பணியாற்றும் குடும்பத்தினர் காமராஜர் நகரில் இருந்து உ.மாரிபட்டி செல்லும் ரோட்டில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஊருக்கும், கோயிலுக்கும் செல்ல பாதை தடைபட்டது. இவ்விவகாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் வந்தபோது, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளதாக ஆக்கிரமிப்பாளர்கள் கூறினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயங்கியதை கண்டித்து வத்தலக்குண்டு ரோட்டில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மீண்டும் மறியலில் ஈடுபட டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அகற்ற முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அலைபேசியில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் பிடித்த போது மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.உசிலம்பட்டி உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார், தாசில்தார் பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ