மேலும் செய்திகள்
'நான் முதல்வன்' திட்டம் திறன் குழு கலந்தாய்வு
08-Aug-2025
மதுரை: 'செப்சிரா' அமைப்பின் சார்பில் உலக அமைதிக்கான சர்வ சமய பிரார்த்தனை மதுரை செனாய் நகர் சேவாலயம் மாணவர் இல்லத்தில் நடந்தது.தேவதாஸ் காந்தி தலைமை வகித்தார்.அனைத்து சமய பாடல்கள், காந்திய சிந்தனைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் முத்துராஜா மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மேம்பாட்டு கருத்துக்களை விளக்கி கல்வி மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாட்டு குறித்து பயிற்சியளித்தார். வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பேராசிரியர் லதா, உதவிப்பேராசிரியர்கள் பரமானந்தம்,ரவிச்சந்திரன், கார்த்திகேயன், கல்யாணி, எர்னஸ்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செப்சிரா, சேவாலயம் மாணவர் இல்லம் செய்திருந்தன.
08-Aug-2025