உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெருமாள் திருக்கல்யாணம்

பெருமாள் திருக்கல்யாணம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏகாந்த திருமஞ்சனம், சாத்துப்படி, நித்தியப்படி பூஜைகள், சுவாமி புறப்பாடு நடந்தது. பின்பு மாலைமாற்றுதல், கன்னிகாதானம், திருமாங்கல்ய தானம், சீர்வாடல், சாத்துமுறை கோஷ்டி, யாக பூஜைகள் நடந்தன. ஸ்ரீதர், சடகோபர், கோபால், சவுமிய நாராயணன், வேங்கட கிருஷ்ணன், பாலாஜி, ஜெகன், வெங்கடேஷ் பட்டர்கள் சடங்குகளை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. தக்கார் மாலதி, நிர்வாக அலுவலர் கார்த்திகைச் செல்வி ஏற்பாடுகளைச் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி