ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் வைகைப் பெரியாறு கால்வாய் பாசனத்தில் நெல் சாகுபடி பணி அதிகளவில் நடக்கிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரங்கள் வாயிலாக விவசாய பணிகளை செய்து வருகின்றனர். கை மற்றும் மோட்டார் இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்க பட்டு வந்தது.தற்போது ட்ரோன் கருவியை பயன்படுத்தி ஒரு ஏக்கரை 3 நிமிடத்தில் தெளிக்கலாம். ஆட்கள் வேலை பார்த்தால் அரை மணி நேரமாகும். நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கும் இவ்வகையில் மருந்து தெளிக்கப்படுகிறது. இம்முறை குறித்து மதுரை வேளாண் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவிகளுக்கு விவசாயிகள் ஜெகதீசன், கிருஷ்ணன் ட்ரோன் உரிமையாளர் அஜித் செயல்முறை பயிற்சி அளித்தனர்.