உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சியுடன் இணைக்க பேச்சிக்குளம் மக்கள் எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

மாநகராட்சியுடன் இணைக்க பேச்சிக்குளம் மக்கள் எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில் முப்பாட்டன் முருக பக்தர்கள் குழு சார்பில் முருககணேசன், கணேஷ்வரன் அளித்த மனுவில், ''தைப்பூச தெப்பத் திருவிழாவையொட்டி பிப்.4 ல் திருப்பரங்குன்றத்தில் ரத்தின சிம்மாசன உற்ஸவம் நடக்கிறது. இதில் பங்கேற்க எங்கள் சமுதாய கூடத்தில் தங்கி தரிசனம் செய்ய உள்ளோம். இந்நிலையில் போலீசார் எங்களை தடுக்கின்றனர்.திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் எங்களை தங்க அனுமதிக்கவில்லை. எங்கள் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தங்குமிடத்திற்கு தடை கூடாது'' என தெரிவித்துள்ளனர்.மதுரை மதநல்லிணக்க குழுவினர் ஒருங்கிணைப்பாளர்கள் வாஞ்சிநாதன், மி.தா.பாண்டியன் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வசிக்கின்றனர்.இங்கு சில அமைப்பினர் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். முதல்வர் இப்பிரச்னையில் தலையிட வேண்டும்.இங்குள்ள மலையை சங்க இலக்கிய பதிவுகளின்படி 'பரங்குன்றம்' என மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர்.பேச்சிக்குளம் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் கூலிவேலை செய்வோர் அதிகம். ஊரக வளர்ச்சி துறையில் நடக்கும் நுாறுநாள் வேலையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளோம். எங்கள் பகுதியை மாநகராட்சியுடன் இணைப்பதால் வீட்டுவரி உட்பட அனைத்தும் உயர்த்தப்படும். இதனால் எங்கள் தொழில் பாதிப்படையும் என்பதால் பேச்சிக்குளத்தை அருகில் உள்ள ஊராட்சியுடன் இணைக்க அல்லது தனி ஊராட்சியாக செயல்பட வழிகாண வேண்டும் என தெரிவித்துள்ளனர்.பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கே.கே.ஸ்ரீனிவாசன், வழக்கறிஞர் கணேஷ்வரன், முன்னாள் ஊடக பிரிவு தலைவர் ராம்குமார் அளித்த மனுவில், ''மதுரை மாநகராட்சி சின்னக்கண்மாய் சண்முகா நகரில் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு வரும் கைத்தறி நகர் டவுன்பஸ்சை பி.பி.ரோடு வழியாக பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை, காமராஜர் புரம் மார்க்கெட் வழியாக இயக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ