உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சரக்கு வாகனங்களுக்கும் ஆண்டு டோல்கேட் கட்டணம் துணை ஜனாதிபதியிடம் மனு

சரக்கு வாகனங்களுக்கும் ஆண்டு டோல்கேட் கட்டணம் துணை ஜனாதிபதியிடம் மனு

மதுரை: சரக்குகளை ஏற்றிச் செல்லும் வணிக வாகனங்களுக்கும் ஆண்டுக்கான 'டோல்கேட்' கட்டணம் நிர்ணயிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோவையில் துணை ஜனாதிபதி ராதா கிருஷ்ணனிடம் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். நிர்வாகிகள் ஜெயப்பிரகாசம், வேல்சங்கர் கூறியதாவது: வாகனங்களுக்கு அதிக 'டோல்கேட்' கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்ததால், தனியார் வாகனங்கள் 200 முறை அல்லது ஓராண்டுக்கு ரூ.3000 'டோல்கேட்' கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக அறிக்கையை மாநில அரசுகளின் டோல்கேட்டுகள் அங்கீகரிக்கவில்லை. பழைய கட்டணம் செலுத்த வலியுறுத்துகின்றனர். மாநில அரசுகளிடம் பேசி மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளிலும் அனுமதி பெற்றுத்தர வேண்டும். தனியார் வாகனங்களுக்கு ஆண்டு டோல்கேட் கட்டணம் விதிக்கப்பட்டதைப் போல் சரக்கு வாகனங்களுக்கும் நிர்ணயித்தால் வணிகர்களுக்கு போக்குவரத்து செலவு குறையும். பொருட்களின் விலையும் குறையும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !