உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உடல் பரிசோதனை முகாம்

உடல் பரிசோதனை முகாம்

மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் உடற்கல்வித் துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் இலவச உடல் பரிசோதனை, ரத்ததான முகாம் நடந்தது.செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். துணை முதல்வர் சகாதேவன் ரத்த தானம் பற்றி எடுத்துரைத்தார். உடல் பரிசோதனையில் மாணவர்கள் 400 பேர், ரத்ததான முகாமில் 40 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சகாதேவன், உடற்கல்வி ஆசிரியர் ராஜா, மேலாளர் லட்சுமணன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !