உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சேடபட்டியில் திட்டக்குழு ஆய்வு

சேடபட்டியில் திட்டக்குழு ஆய்வு

உசிலம்பட்டி: சேடபட்டி வட்டாரத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் அமலோற்பவநாதன், விஜயபாஸ்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரன் ஆய்வு செய்தனர். உசிலம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் உழவர் குழுக்கள் மூலம் கால்நடை தீவன உற்பத்தி, விற்பனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். எழுமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஒருங்கிணைந்த ஸ்டெம் அறிவியல் மையத்தை பார்வையிட்டனர். எழுமலை கால்நடை மருத்துவமனை, மேலத்திருமாணிக்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இல்லம்தேடி கல்வி திட்டம் குறித்தும் ஆய்வு செய்தனர். அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ