உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 12 ஆயிரம் பனை விதைகள் நடவு

12 ஆயிரம் பனை விதைகள் நடவு

மதுரை : கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், பார்வை பவுண்டேஷன் இளம் மக்கள் இயக்கம் சார்பில் மேலக்காலில் உள்ள நிலையூர் கால்வாயில் பனை நடும் விழா நடந்தது. திட்ட அலுவலர் அபிராமி ஏற்பாடுகளை செய்திருந்தார். முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். மேலக்கால் ஊராட்சி செயலர் விக்னேஷ், காடுபட்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., கணேஷ்குமார், திட்ட அலுவலர்கள் நந்தகுமார், நல்லகுரும்பன், முத்து பெருமாள், இயக்க நிறுவனர் சோழன், நல்லோர் வட்ட ஒருங்கிணைப் பாளர் குறிஞ்சிமணி, தன்னார்வலர்கள் சங்கர், ஜெயராஜ், துரைராஜ், கவுதம், உக்கிரபாண்டி கலந்து கொண்டனர். மாணவர்கள் 230 பேர் 2 மணி நேரத்தில் 12 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை