பிளாஸ்டிக் கழிவு அகற்றம்
மேலுார்: மேலுார் பெரியாறு பாசன கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடந்தது. நகராட்சி கமிஷனர் பாரத் தலைமையில், நகராட்சி எஸ்.ஐ.,தினேஷ் குமார், துாய்மை பணியாளர்கள் 1.5 டன் பிளாஸ்டிக் குப்பையை அகற்றினர். கலெக்டர் சங்கீதா உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமையில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.