உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 226 பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்

226 பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்

மதுரை: மதுரையில் 226 பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு துவங்கியது.மார்ச் 3ல் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு துவங்குகிறது. அதற்கு முன் பிப்.,7 முதல் 14 வரை செய்முறை தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் 226 பள்ளிகளில் நேற்று துவங்கியது. பள்ளிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் வேதியியல், இயற்பியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பாட செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. 1200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். சி.இ.ஓ., ரேணுகா தேவி தலைமையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை