உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிரியர் உட்பட மூவர் மீது போக்சோ

ஆசிரியர் உட்பட மூவர் மீது போக்சோ

மதுரை: மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் மீதும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை, வசந்த நகரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஜெயராம். இவர், பாலியல் தொந்தரவு செய்வ தாகவும், இதுகுறித்து புகார் செய்தும் தலைமையாசிரியை பொற்செல்வி, உதவி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சைல்டு லைனிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஒன்பது, ஏழாம் வகுப்பு படிக்கும் ஏழு மாணவியர் புகார் தெரிவித்தனர். ஜெயராம், தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது போக்சோவில் திலகர் திடல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி