உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போக்சோ வழக்கு தண்டனை

 போக்சோ வழக்கு தண்டனை

மதுரை: மதுரை அருகே களிமங்கலம் தர்மலிங்கம்45. கொத்தனார். இவர் ஒரு சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்தார். கருப்பாயூரணி போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி முத்துக்குமரவேல் பிறப்பித்த உத்தரவு: தர்மலிங்கத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி