உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குன்றத்து மலைக்கு சென்றோரை சோதித்து அனுமதித்த போலீசார்

 குன்றத்து மலைக்கு சென்றோரை சோதித்து அனுமதித்த போலீசார்

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார், சோதனையிட்ட பின் பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மலை மேல் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் முடித்து திரும்பினார். பின், போலீசாரிடம், மலை மேல் ஒரு பெண் பிரியாணி சாப்பிடுவதாக தெரிவித்தார். அவரிடம் போலீசார், 'மலை மேல் செல்வோரை நன்கு பரிசோதித்த பின்தான் அனுமதிக்கிறோம். அசைவ உணவுகள் முழுதுமாக தடை செய்யப்பட்டுள்ளன' என்றனர். பின், போலீசார் மலை மேல் சென்று பார்த்ததில், அர்ஜுன் சம்பத் கூறிய பெண்ணிடம் பழங்கள், பிஸ்கட் மட்டும் இருந்தன என தெரிவித்தனர். அர்ஜுன் சம்பத், காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றபோது தொண்டர்கள் ஹிந்து மக்கள் கட்சி கொடியை எடுத்து சென்றனர். போலீசார் கொடியை வாங்கிய பின் அவர்களை மலைக்கு அனுப்பினர். அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலர் ராமலிங்கம், முருகன், சேவல் படங்கள் வரைந்த மஞ்சள் கொடியுடன் மலைக்கு செல்ல முயன்றார். அவருக்கும் போலீசார் தடை விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை