உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பேரையூர்: தெற்கு தெரு சதுரகிரி மகன் வெங்கடேஷ் 34. இவர் மீது திருமங்கலம் போலீசில் கொலை வழக்கு உள்ளது. இவர் வீட்டில் கஞ்சா வைத்து விற்று வந்துள்ளார். போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நடத்திய சோதனையில் 75 கிலோ கஞ்சா வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.--

* கடன் பிரச்னையால் தற்கொலை

அலங்காநல்லுார்: மதுரை பொதும்பு லாரி டிரைவர் விஜய் பாண்டி 30. இவருக்கு மனைவி மற்றும் 7 வயது மகள் உள்ளனர். சில மாதங்களாக கடன் தொல்லையால் சிரமப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.--

* விபத்தில் வாலிபர் பலி

சோழவந்தான்: திருச்சி மணப்பாறை மணி மகன் யுவராஜ் 21, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை ஊழியர். நேற்று முன்தினம் நள்ளிரவு ஊரில் இருந்து சிவகாசிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். சோழவந்தான் அருகே நகரி நான்குவழிச் சாலையில் வாகனம் ஒன்று மோதி இறந்தார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.--

* அடுத்தடுத்து வழிப்பறி

திருமங்கலம்: சின்ன செங்குளம் தனியார் நிறுவன ஊழியர் திருப்பதி 53. நேற்று முன்தினம் இரவு ஆறு கண் பாலம் அருகே குளித்துவிட்டு விருதுநகர் ரோட்டில் நடந்து வந்தார். அவரை வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் செயினை பறித்து தப்பினார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். * குராயூர் சங்கிலி 30. நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து கள்ளிக்குடி வந்த இவர், இரவில் கள்ளிக்குடியில் இருந்து குராயூருக்கு நடந்து சென்றார். ஓடைப்பட்டி அருகே வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி ஒன்றரை பவுன் செயினை பறித்து தப்பினார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.------

* மது பாட்டில்கள் பறிமுதல்

திருமங்கலம் : வேப்பனுாத்து பகுதியில் சிந்துபட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதியை சேர்ந்த சந்திரசேகர் 42, வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சோதனை நடத்திய போலீசார் 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

--- * செயின் பறித்த பெண் கைது ---------------------------------------- (படம் உண்டு)

மேலுார்: தும்பைபட்டி தனலட்சுமி 65. நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அங்கு வந்த பெண் அதே ஊரை சேர்ந்தவரிடம் பணம் வாங்க வந்திருப்பதாக கூறினார். பிறகு மிளகாய் பொடி துாவிய துண்டால் முகத்தை மூடி கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்து தப்பினார். தனலட்சுமி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலுார் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, செயின் பறித்த ஆத்துக்கரைபட்டி சரஸ்வதியை 25, கைது செய்து, செயினை பறிமுதல் செய்தார்.---

* ஜாமினில் வந்தவர் கைது-------- ---------------------------- (படம் உண்டு)

அலங்காநல்லுார்: கோவில்பாப்பாகுடி சின்ன கண்மாய் தெரு நாகமுத்து 36, பெயின்டர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே கழுத்தில் வெட்டப்பட்டு, முகத்தை எரித்து கொலை செய்யப்பட்டார். அலங்காநல்லுார் போலீசார் அதேபகுதி வெண்மணி மகன் ஹரிஹரன் என்ற கோழிக்கறியை 18, கைது செய்தனர். நேற்று முன்தினம் மாலை ஹரிஹரன் தனது தந்தை வெண்மணியுடன் போதையில் தகராறு செய்தபோது போதையில் வந்த நாகமுத்து, ஹரிஹரனை கண்டித்து அனுப்பியுள்ளார். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை நடந்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் சமயநல்லுார் அருகே அம்பலத்தடியில் நடந்த கொலை வழக்கில் கைதான ஹரிஹரன் சமீபத்தில் ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.----

* பெண்ணிடம் நகை பறிப்பு

வாடிப்பட்டி: சமயநல்லுார் வைகை ரோடு சொக்கன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இவரது மனைவி ரேணுகாதேவி 45, அப்பகுதியில் கடை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த ரேணுகா தேவியிடம் சிகரெட் வாங்கிய வாலிபர் அவரது தாலிச் செயினை பறித்தார். ரேணுகாதேவி பிடித்து கொண்டதால் 2 பவுன் செயினுடன் அந்த நபரின் கையோடு போனது. அவர் டூவீலரில் காத்திருந்த மற்றொரு நபருடன் தப்பினார். போலீசார் விசாரிக்கின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ