உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

நகை, பணம் திருட்டு

கொட்டாம்பட்டி : கருங்காலக்குடி இளையபெருமாள் 74. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். குடும்பத்தினருடன் நவ.4 ல் சென்னையில் உள்ள மகளை பார்க்க சென்றவர் நேற்று வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு 12 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரிக்கிறார்.

ஆடுகள் திருட்டு

மேலுார்: சின்னகற்பூரம்பட்டி செல்வராஜ் 49, ஆடு வளர்ப்பவர். இவருடைய தோட்டத்தில் கட்டியிருந்த நான்கு ஆடுகள் திருடு போனது. மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

வழிப்பறி செய்த ஐவர் கைது

பாலமேடு: உத்திரபிரதேசத்தை சேர்ந்த நபிஸ் மற்றும் பாஜில், டூவீலரில் பாலமேடு பகுதியில் தார்ப்பாய் விற்பனை செய்தனர். எர்ரம்பட்டிக்கு விற்பனைக்காக சென்றவர்களிடம் இருந்து தார்ப்பாய், அலைபேசியை வழிப்பறி செய்த அதேபகுதி அழகர்சாமி 20, பொன் மாதவன் 27, கோபிநாத் 21, மாவீரன் 20, அழகுராஜா 26, ஆகியோரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் பாலமேடு போலீசார் கைது செய்தனர்.

புகையிலை விற்றவர் கைது

அலங்காநல்லுார்: சரந்தாங்கி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக அலங்காநல்லுரர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் சோதனை செய்து முருகேசன் 40, கடையிலிருந்து 4 கிலோ 245 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து முருகேசன் கைது செய்தனர்.

கட்டிலில் இருந்து விழுந்து பலி

பேரையூர்: காளீஸ்வரி காலனி பிரகாஷ் 44. இவர் நேற்று முன்தினம் இரவு கட்டிலில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். துாக்கத்தில் கட்டிலில் இருந்து உருண்டு விழுந்தவர் தலையில் அடிபட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ