உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள் மதுரை

போலீஸ் செய்திகள் மதுரை

நகை திருட்டு

மேலுார்: ஆட்டுக்குளம் முத்துச்செல்வி 31. நுாறு நாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது கதவு மற்றும் பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்து 9 பவுன் நகை திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

இளைஞர் பலி

மேலுார்: க.கல்லம்பட்டி தட்சிணாமூர்த்தி 40. தச்சுத்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை உறவினர் பிரதீப்பை 23, டூ வீலரில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். தும்பைப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் பின்னால் வந்த கார் மோதியதில் பிரதீப் இறந்தார்.

பஸ் மீது கல்வீச்சு

திருப்பரங்குன்றம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக் ராஜா 22. நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்தார். டவுன் பஸ்சின் சக்கரம் ரோட்டில் கிடந்த தண்ணீர் பாட்டிலில் ஏறிய போது ரபீக்ராஜா மீது தண்ணீர் பட்டது. ஆத்திரமுற்றவர் கல் எறிந்ததில் பஸ்சின் பின்புற கண்ணாடி சேதமுற்றது. அவரை போலீசார் கைது செய்தனர்.

வேன் டிரைவர் பலி

கள்ளிக்குடி: நெல்லை மேலப்பாளையம் கூரியர் வேன் டிரைவர் ராமலிங்கம் 44. நேற்று முன்தினம் இரவு ஈரோட்டிற்கு வேனை ஓட்டிச் சென்றார். அவருடன் உதவியாளர் அன்சாரி சென்றார். நேற்று அதிகாலை கள்ளிக்குடி அருகே டூவீலரில் வந்த ஒருவர் ரோட்டின் தடுப்பில் மோதி விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த கொடைக்கானல் சென்ற அரசு பஸ் பிரேக் அடித்த போது கூரியர் வேன் பின்பகுதியில் மோதியது. இதில் ராமலிங்கம் பலியானார். அன்சாரி காயங்களுடன் தப்பினார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை