நகை திருட்டு: 2 பேர் கைது
மதுரை: மேலமாரட் வீதி சபரீஷ் பார்க் விடுதியில் சென்னை மயிலாப்பூர் சீதாலட்சுமி 53, குடும்பத்துடன் தங்கினார். அவரது அறையில் இருந்து 22 கிராம் தங்க நகைகள், 32 காரட் வைர நகைகள் திருடுபோயின. விசாரணையில் ரூம் பாய் அப்துல்கலாம் 27, வரவேற்பு ஊழியர் பாலகார்த்திக் 29, திருடியது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். சங்கத்தில் மோசடி: 12 பேர் மீது வழக்கு
மதுரை: மதுரை நகை வியாபாரிகள் சங்கத்தில் 2016 முதல் 2022 ஆக., வரை பதவியில் இருந்தபோது முந்தைய உறுப்பினர்கள் ரூ.2.6 லட்சம் மதிப்பிலான ஷீல்டுகள் மற்றும் வெள்ளிப்பொருட்களுக்கான சரியான வவுச்சர் உள்ளிட்டவைகள் இல்லாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. பொதுச்செயலாளர் கற்பூரம் புகாரில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பின் கைது
மதுரை: அரசு மருத்துவமனை ரோட்டில் 2009ல் ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்து நடந்த போராட்டத்தில் அப்போதைய காங்., தலைவர் சோனியாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய ஆத்திகுளம் குறிஞ்சிநகர் மணிசங்கர் 35, துபாய் சென்ற நிலையில் அவரை கைது செய்ய 'லுக் அவுட்' நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெளிநாட்டில் இருந்து விமானம் மூலமாக மதுரை வந்தவரை மதிச்சியம் போலீசாரிடம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர். விவசாயிக்கு கத்திக்குத்து
மேலுார்: பூஞ்சுத்தி விவசாயி கணேசன் 48. நேற்று அதிகாலை வீட்டருகே பஸ் ஸ்டாப்பில் இருந்த போது டூ வீலரில் வந்த இருவர் கத்தியால் குத்தி ரூ.2,500 பறித்து சென்றனர். எஸ்.ஐ., சுப்புலட்சுமி விசாரிக்கிறார்.