உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

லாட்டரி பறிமுதல்

பேரையூர்: அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பேரையூர் தாலுகா சாப்டூரில் விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த பிச்சையாண்டி, பஞ்சவர்ணம், டி. பாறைப்பட்டி முருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 187 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து இன்ஸ்பெக்டர் பூமா விசாரிக்கிறார்.

மது விற்ற இருவர் கைது

டி.கல்லுப்பட்டி: வன்னிவேலம்பட்டி முத்துக்கண்ணன் 58. இவர் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். பெட்டிக்கடையில் மது விற்றபோது, ரோந்து சென்ற எஸ்.ஐ வேலுச்சாமி அவரை கைது செய்தார். அவரிடம் 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். சேடபட்டி: பெரியகட்டளை தங்கப்பாண்டி 35. இவர் வீட்டின் பின்புறம் மது விற்றார். ரோந்து சென்ற சேடபட்டி எஸ்.ஐ., கருப்பையா அவரை கைது செய்து 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.---சூதாடிய 7 பேர் கைதுபேரையூர்: சாப்டூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அதே ஊரைச் சேர்ந்த உதயா 40. முத்துராஜா 40. ஆனந்தன் 53. லட்சுமணன் 43. சின்னச்சாமி 46. முருகன் 47. மேடைதுரை 38. ஆகியோர் சூதாடிக் கொண்டிருந்தனர். ரோந்து சென்ற எஸ்.ஐ சரவணகுமார் அவர்களை கைது செய்து விசாரிக்கிறார்.

கள் விற்றவர் கைது

பேரையூர்: பேரையூர் தாலுகா எஸ்.மேலப்பட்டி மாடசாமி 42. இவர் அதே ஊரில் அவர் தோட்டத்தில்கள் விற்றுக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற எஸ்.ஐ சந்தோஷ்குமார் அவரை கைது செய்து 14 லிட்டர் கள் பறிமுதல் செய்தார்.

30 கிலோ குட்கா பறிமுதல்

திருமங்கலம்: மேலக்கோட்டை விலக்கில் தாலுகா போலீஸ் எஸ்.ஐ., பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது அதில் அரசு தடை செய்த 30 கிலோ புகையிலை பொருட்கள், குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பேரையூர் சில மரத்துபட்டியைச் சேர்ந்த ஆசைதம்பியை 47, கைது செய்து விசாரிக்கின்றனர்.---

சாலை மறியல்

பெருங்குடி: இங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மின்விளக்கு அலங்காரம் செய்வது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் உதவி கமிஷனர் சீதாராமன் சமாதானம் பேசியதால் மறியலை கைவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி