உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

சிலிண்டர் வெடித்து ---------------------பொருட்கள் சேதம் கொட்டாம்பட்டி: அம்பலக்காரன் பட்டி வெள்ளையப்பன். மலேசியாவில் பணிபுரிகிறார். இவரது மனைவி விஜய ராணி 40. நேற்று காலை விஜயராணி தனது ஓட்டு வீட்டை பூட்டி வெளியே சென்றார். இந்நிலையில் காஸ் சிலிண்டர் வெடித்து மின்சாதன பொருட்கள், மூன்று பவுன் நகை, வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் தீக்கிரையானது. மின் கசிவால் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்ற கோணத்தில் கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.விவசாயி பலி கொட்டாம்பட்டி: வைரவன்பட்டி விவசாயி ஜெயராமன் 61. நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்கு நடந்து சென்றார். அதே திசையில் வந்த டூவீலர் மோதி ஜெயராமன் இறந்தார். எஸ்.ஐ., கவிதா, போலீசார் தேவேந்திரன் விசாரிக்கின்றனர்.மேலும் ஒருவர் பலிதிருமங்கலம்: மதுரை அண்ணாநகர் முருகன் 38. இவரது நண்பர்கள் வில்லாபுரம் முத்துக்குமார், நரிமேடு பிரபு, அவனியாபுரம் சுரேஷ்குமார். இவர்கள் நேற்று முன் தினம் மினி வேனில் விருதுநகர் சென்றனர். மதுரையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஓட்டிச் சென்றார். சமத்துவபுரம் அருகே ஸ்ரீவில்லிபுத்துார் சென்ற வேன் மினி வேன் மீது மோதியது. இதில் மினி வேன் கவிழ்ந்து நால்வாரும் காயமடைந்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் முருகன் பலியானார். மற்றவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். இதில் முத்துக்குமார் நேற்று பலியானார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை