போலீஸ் செய்திகள்...
ஆட்டோ டிரைவர்கள் இருவர் கைதுதிருமங்கலம்: தேனி மாவட்டம் போடி அஜித்குமார் 28. உத்தமபாளையத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து திருமங்கலம் மேலகோட்டையில் வசித்தார். மூன்று மாதங்களுக்கு முன் அந்தப் பெண் கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். அஜித்குமார் திருமங்கலத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார்.இந்நிலையில் அண்ணாநகர் ஆட்டோ டிரைவர் முத்துப்பாண்டிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டனர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தாலுகா அலுவலகம் முன்பு அஜித்குமார் ஆட்டோவில் சென்ற போது முத்துப்பாண்டி, மற்றொரு ஆட்டோ டிரைவர் மணிகண்டன் ஆகியோர் வழிமறித்தனர். இருவரும் அஜித்குமாரை தாக்கி மண்டையை உடைத்தனர். அங்கிருந்தோர் அஜித்குமாரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டிரைவர்கள் முத்துப்பாண்டி, மணிகண்டனை திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்தனர்.சிறுமி திருமணம்: பெற்றோர் மீது வழக்குதிருமங்கலம்: குழந்தை திருமணம் நடந்ததாக மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தப் புகாரின் அடிப்படையில் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் ஆவுடையம்மாள் 57, உலகாணி கிராமத்தில் விசாரித்தார். உலகாணி அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் 25, என்பவருக்கும் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ஜூன் 9ல் திருமணம் நடந்தது தெரியவந்தது. ஆவுடையம்மாள் புகாரில் அரவிந்த், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீஸ் துாக்கிட்டு தற்கொலைதிருமங்கலம்: கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் 37, மதுரை ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவிதா ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறார். ஜூன் 17, 18ல் விடுமுறையில் இருந்த சிலம்பரசன், அன்று மாலை தோட்டத்து வீட்டில் துாங்கச் செல்வதாக கூறி சென்றார். இரவு 11:00 மணி வரை சாப்பிடாததால் மனைவி கவிதா அங்கு சென்று பார்த்தார். அவரது கணவர் சிலம்பரசன், துாக்கிட்டு இறந்து கிடந்தது தெரிந்தது. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.போட்டோகிராபர் --------------------------விபத்தில் பலிமதுரை: பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி முருகன் வயது 63. போட்டோகிராபர். நேற்று காலை ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டுக்காலனி அருகே பைக்கில் சென்றார். அவ்வழியே வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. பஸ் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் அவர் பலியானார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.கால்வாயில் மூழ்கி மூதாட்டி பலிமதுரை: வாடிப்பட்டி அருகே கொண்டயம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வள்ளி, 70. விவசாய கூலியான மகன் செல்வத்தின் 53, பராமரிப்பில் இருந்தார்.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீட்டின் எதிரே உள்ள கால்வாயில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார். அம்பலத்தடி கால்வாய் மடை அருகே அவரது உடல் கைப்பற்றப்பட்டது. சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.கிணற்றுக்குள் தவறி விழுந்தவர் பலிஉசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனூர் அருகே கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னாங்கன் 60. விவசாயக் கூலி தொழிலாளியான இவர் தனது தோட்டத்தில் உள்ள 100 அடி ஆழ கிணற்றின் சுவர்களில் முளைத்திருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது பக்கவாட்டு சுவர் சரிந்ததில் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். உத்தப்பநாயக்கனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.புகையிலை விற்றவர் கைதுகொட்டாம்பட்டி: எஸ்.ஐ., முகமது சலில் சல்மான் பெரிய கற்பூரம் பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது கடையில் புகையிலை விற்ற இளங்கோவனை 63, கைது செய்து 10 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.