உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

தேடப்படும் குற்றவாளிகள்

மதுரை: புதுராமநாதபுரம் ரோடு மீனாட்சி நகர் லட்சுமி தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரை 2008ல் திருட்டு வழக்குகளில் தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு மதுரை ஜே.எம். கோர்ட் 1ல் நடந்து வருகிறது. இதில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் இவருக்கு பிடிவாரன்ட் பிறக்கப்பட்டதோடு, 'தேடப்படும் குற்றவாளியாக' கோர்ட் அறிவித்து செப்.,12க்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளது. மதுரை எல்லீஸ்நகர் அழகர்ராஜன். டூவீலர் திருட்டு வழக்கில் 1999ல் கரிமேடு போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் செந்தில். ரிக் ஷா திருடிய வழக்கில் 1996ல் கைது செய்யப்பட்டார். மதுரை ஜே.எம். கோர்ட் 5ல் நடக்கும் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இவர்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து செப்.29க்குள் சரணடைய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காதல் திருமணத்தால் கொலை

மேலுார்: பொட்டப்பட்டி ராகவி பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ்குமாரை காதலித்து மறுமணம் செய்தார். உறவினர்கள் பிரித்தனர். போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆக.16 விசாரணையில் சதீஷ்குமாருடன்தான் வாழ்வேன் என ராகவி கூறினார். இதைதொடர்ந்து சதீஷ்குமாருடன் டூவீலரில் ராகவி சென்றபோது சிங்கப்பூரில் உள்ள அவரது தம்பி ராகுல் ஏற்பாட்டில் நண்பர்கள் காரை ஏற்றி இருவரையும் கொல்ல முயற்சித்தனர். இதில் சதீஷ்குமார் இறந்தார். ராகவியின் தந்தை அழகர் கைதான நிலையில் நேற்று தும்பை பட்டி அய்யனார் 25, அருண் பாண்டியனை 23, கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை