உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்

தேடப்படும் பெண் குற்றவாளி மதுரை: பைகாராவைச் சேர்ந்தவர் சுசீலா. இவர் மீது 1997ல் திடீர் நகர் போலீசார் திருட்டு வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் சுசீலாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள மதுரை ஜே.எம். கோர்ட் எண் 5, அடுத்த மாதம் 19ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. டூவீலரில் சென்ற பெண் பலி திருமங்கலம்: செங்கப்படை மூர்த்தி 56. மின்ஆய்வாளர். இவரது மனைவி சரஸ்வதி 52. ஆடுகளுக்காக களைச் செடிகளை பறித்துவிட்டு வில்லுாரிலிருந்து புளியம்பட்டி அருகே டூவீலரை ஓட்டிவந்த போது நிலைத் தடுமாறி கீழே விழுந்து இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். 'லிப்ட்' கேட்டு டூவீலர் பறிப்பு திருமங்கலம்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கீழநீலிநல்லுார் ஆறுமுகம் 49. கட்டட தொழிலாளி. கப்பலுாரில் வேலை செய்து வருகிறார். மதியம் டீ குடிக்க ரிங் ரோட்டில் உள்ள புளியங்குளத்திற்கு டூவீலரில் சென்றார். அப்போது 28 வயது நபர் 'லிப்ட்' கேட்டு பயணித்தார். சிறிதுதுாரம் சென்ற பிறகு ஆறுமுகத்தை கீழே தள்ளிவிட்டு டூவீலரை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற 4 பேர் கைது வாடிப்பட்டி: இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்.ஐ., உத்திரராஜ் தலைமையில் போலீசார் காஜா நஜிபுதின், செல்லப்பாண்டி நேற்று செமினிபட்டி பகுதியில் குற்றத் தடுப்பு ரோந்து சென்றனர். அங்குள்ள பாலம் அருகே கஞ்சா விற்ற வாடிப்பட்டி ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு கோபி 26, தாதம்பட்டி மகாமுனி 20, பிரணவ் குமார் 24, வினோத் குமாரை 21, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை