உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்

மூதாட்டி பலி திருமங்கலம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்லுவார்பட்டி போத்தம்மாள் 60. கப்பலுாரில் உள்ள உறவினர்களை பார்க்க 2 நாட்களுக்கு முன்பு வந்தார். உறவினர்களை பார்த்த பின்பு நேற்று அவர்களது டூவீலர் பின்னால் அமர்ந்து திருமங்கலத்திற்கு வந்தார். மறவன்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு டூவீலர் மோதியது இதில் கீழே விழுந்த போத்தம்மாள் தலையில் காயம் அடைந்து இறந்தார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். நீரில் மூழ்கி பலி மதுரை: நத்தம் அசோக்நகர் வெங்கட்ராமன் 50. திருமணமாகாதவர். அழகர்கோவில் பொய்கைகரைப்பட்டி குறிஞ்சிநகர் பகுதி விடுதியில் 3 ஆண்டுகளாக தங்கியிருந்தார். நேற்று கள்ளந்திரி பெரியார் கால்வாயில் குளித்தபோது நீர் சுழற்சிக்குள் சிக்கி இறந்தார். அப்பன்திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ