உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பிரியாணி கொடுத்து '75'க்கு தொல்லை: '30' கைது

திருமங்கலம்: உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியின் 2 மகன்கள் வெளியூரில் உள்ளனர். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது ஊரைச் சேர்ந்த தங்கராமன் 30, என்பவர் வீட்டருகே உள்ள கடைக்கு மூதாட்டி சென்றார். அவரிடம் தங்கராமன், '2 பிரியாணி வாங்கி வந்துள்ளதாகவும், வீட்டுக்குள் வந்து சாப்பிடுமாறும்' கூறியுள்ளார். பேரன் வயதுள்ளவர் அழைத்ததால், அவரை நம்பி வீட்டுக்குள் சென்று சாப்பிட்டுள்ளார். அவருக்கு தங்கராமன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிந்துபட்டி போலீசார் கைது செய்தனர்.

----பெண் கொலையா

பேரையூர்: வேப்பம்பட்டி ராமச்சந்திரன் மனைவி குருவம்மாள் 55. விவசாயக் கூலி. நேற்று முன்தினம் இரவு கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆடுகள் திருட்டு

மேலுார் : தும்பைபட்டி விவசாயி ராசு 60, ஆடு வளர்ப்பவர். இவரது வீட்டின் பின்பகுதியில் கட்டியிருந்த இரண்டு ஆடுகளை மூன்று பேர் திருடிச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. எஸ்.ஐ., ஆனந்தஜோதி விசாரிக்கிறார்.

தொழிலாளி இறப்பு

திருமங்கலம்: உசிலம்பட்டி தாலுகா ஜோதிமாணிக்கத்தை சேர்ந்தவர் தொழிலாளி சந்திரன் 39. இவர் உடல்நிலை சரியில்லாததால் செல்லம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். டாக்டர் இல்லாததால் நர்ஸ் சிகிச்சை அளித்துள்ளார். சிறிது நேரத்தில் சந்திரன் மயங்கி விழுந்தார். உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை