உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 26 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளிகளை தேடும் போலீசார்

26 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளிகளை தேடும் போலீசார்

மதுரை: திருட்டு வழக்கில் கைதாகி 26 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாரியம்மன் கோயில் தெரு செந்தில். இவர் 1996 ஜூலை 15 மதுரை மேலப்பொன்னகரத்தில் ஜான்சன் என்பவரின் ரிக்ஷாவை திருடியதாக கரிமேடு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்தவர் 26 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.அதுபோல் 1997 மே 29ல் மதுரை பைபாஸ் ரோட்டில் பிரபாகரன் என்பவரின் டூவீலரை திருடிய வழக்கில் எல்லீஸ் நகர் அழகர் ராஜன், 26 ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்து வருகிறார். இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள நீதிமன்றம், ஜூலை 29 மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.வழிப்பறி வழக்கில் தேடப்படும் மதுரை காமராஜர் சாலை பங்கஜம் காலனி கண்ணன், ஜூலை16 நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை