போலீசாருக்கு பயிற்சி
மதுரை: மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை சார்பில் ஸ்டேஷன் போலீசாருக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. விபத்து, அவசர தேவைகளில் போலீசாரின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் அவர்கள் பங்கேற்கும்போது, முறையான முதலுதவி கிடைத்தால் பாதிக்கப்படுவோர் பாதுகாக்கப்படுவர். இதனால் அவர்களுக்கு ஆபத்து காலங்களில் அவசர உதவிகள், இதய அடைப்பு அல்லது மயக்கம் வந்த நிலையில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் (சி.பி.ஆர்.,) பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் பயிற்சி அளித்தார்.