உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற காவலர்

 ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற காவலர்

மதுரை: சென்னையில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் 22 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழக காவல் துறை சார்பில் மதுரை திலகர் திடல் ஸ்டேஷன் ஏட்டு ஜெயச்சந்திர பாண்டி , 40 பங்கேற்றார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கம், 300மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம், 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். போலீஸ் கமிஷனர் லோகநாதன் இவரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நுண்ணறிவு பிரிவு, தீவீர குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் எஸ்தர், காசி உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி