உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லுாரிகளில் பொங்கல் விழா

பள்ளி கல்லுாரிகளில் பொங்கல் விழா

மதுரை : மதுரை திருஞானம் துவக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடந்தது. செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சரவணன் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் கீதா நன்றி கூறினார். ஆசிரியை பாக்கியலட்சுமி ஏற்பாடு செய்தார்.மாடக்குளம் அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி மாணவர்கள் விடுதியில் காப்பாளர் சங்கரசபாபதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பாளர் சேவியர் பால்சாமி சிறப்புரையாற்றினார். மாணவர்களின் சிலம்பு, பேச்சு, பாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விடுதி மாணவர் கார்த்திக் நன்றி கூறினார்.நாகமலை புதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ., சி. பி. எஸ்.இ., பள்ளியில் முதல்வர் லதா தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களின் பேச்சு, கவிதை, பாடல், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய நடனப் போட்டிகள் நடந்தன. பானை உடைக்கும் போட்டியில் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மழலையர் பிரிவு தலைமையாசிரியை ஹெப்சிபா சலோமி ராணி, ஆசிரியை உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாதனை கோலம்

திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தலைமையாசிரியர் தண்ணாயிர மூர்த்தி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் உலக சாதனைக்காக 133 அடி நீளம், 7 அடி அகலத்தில் 133 மாணவிகள், ஆசிரியர்கள் இணைந்து 1330 வினாடிகளில் பொங்கல் பானை கோலமிட்டனர். இதை சோழா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை