உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் மின்வெட்டு

பேரையூரில் மின்வெட்டு

பேரையூர் : பேரையூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடை, குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் சாதனங்கள் பழுதாகி வருகிறது.இப்பகுதிகளில் பல நாட்களாக தொடர் மின்தடை, குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள், தொழில்துறையினர் மிகுந்த அவதிப்படுகின்றனர். வங்கிகள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், தையல் தொழிற்சாலைகள், ரைஸ்மில்கள், விசைத்தறி உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.வீடு மற்றும் தொழில் துறை சார்ந்த மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாவதாக மக்கள் புகார் அளிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பிரச்னை குறித்து மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ