உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் பூர்வாங்க பூஜை

குன்றத்தில் பூர்வாங்க பூஜை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்களுக்கான பாலாலய பூஜை துவங்கும் வகையில் இன்று(ஏப்.,6) மாலை பூர்வாங்க பூஜை நடக்கிறது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு ஏப்.,9ல் பாலாலயம் பூஜை நடக்கிறது. அதற்காக திருவாட்சி மண்டபத்தில் ஆறு யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை யாகசாலை பூஜை துவங்குகிறது. இன்று மாலை சரவண பொய்கையில் பிடி மண் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் துவங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை