மேலும் செய்திகள்
குன்றத்தில் 2 நாட்கள் விநாயகர் சிலை ஊர்வலம்
27-Aug-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி சார்பில் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி அன்று நகரின் முக்கிய இடங்களில் 3 அடி முதல் 10அடி உயரமுள்ள 36 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. மேலும் ஒரு அடி உயரமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டன. அச்சிலைகள் நேற்று மாலை 16 கால் மண்டபம் கொண்டுவரப்பட்டன. சேலம் கோட்ட பொறுப்பாளர் சந்தோஷ், மதுரை கோட்ட பொறுப்பாளர் அரச பாண்டி, மாவட்டத் தலைவர் அழகர் தலைமையில் பூஜை, தீபாராதனை முடிந்து ரத வீதிகள், பெரிய ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செவ்வந்திக்குளம் கண்மாயில் கரைக்கப்பட்டன.
27-Aug-2025