குன்றத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா சார்பில் விநாயகர் சதுர்த்தியன்று நகரின் பல்வேறு இடங்களில் 25 மெகா விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. அந்த விநாயகர் சிலைகள் 16 கால் மண்டபம் முன்பு கொண்டுவரப்பட்டது. அகில பாரத அனுமன் சேனா தலைவர் ஸ்ரீதர், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ராமலிங்கம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன்ஜி, ஹிந்து மக்கள் கட்சி தென் மண்டல தலைவர் அன்பழகன், அனுமன் சேனா மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. பின்பு சிலைகள் கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக கிரிவலம் பாதை சென்று செவ்வந்தி குளம் கண்மாயில் கரைக்கப்பட்டது. வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மகளிர் அணி தலைவர் அன்னலட்சுமி, சகிலா கணேசன், பா.ஜ., மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன் பங்கேற்றனர்.