உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ஆவினுக்கு எதிராக பிப்.24 முதல் பால் நிறுத்த போராட்டம் உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவிப்பு

மதுரை ஆவினுக்கு எதிராக பிப்.24 முதல் பால் நிறுத்த போராட்டம் உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவிப்பு

மதுரை: பால் ஊக்கத் தொகையை பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க சேமிப்பு கணக்கிற்கு அனுப்ப வலியுறுத்தி மதுரை ஆவினுக்கு பிப்.24 முதல் பால் நிறுத்தம் செய்து, கறவை மாடுகளுடன் ரோடு மறியல் போராட்டத்தை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் பெரியகருப்பன், உக்கிரபாண்டி, வெண்மணி சந்திரன் கூறியதாவது: மதுரை உட்பட அனைத்து ஆவின் பால் ஒன்றியங்களிலும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் ஆவினுக்கு அனுப்பப்படும் பாலிற்கான கிரைய தொகை சங்க சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும் லிட்டருக்கு ரூ. 3 ஊக்கத் தொகை சங்க கணக்கில் இருந்து உறுப்பினர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது.ஆனால் ஜனவரி முதல் ஆவின் மூலம் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகை நேரடியாக வழங்கப்படுகிறது. இதனால் கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தி குறைந்து சங்கம் நலிவடைந்து செயலற்று போகும் நிலைக்கு தள்ளப்படும். மதுரை ஆவினில் வரும் நிகர லாபம் 50 சதவீதம் கூட்டுறவு சட்டத்தின்படி பால் உற்பத்தியாளர்களுக்கு போனசாக உடன் வழங்க வேண்டும். பி.எம்.சி.,யில் இருந்து ஆவின் மெயின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் பாலின் தரம், எடை அந்த இடத்திலேயே (ஸ்பாட் டெஸ்ட்) குறித்து கொடுக்க வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 24 முதல் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் தொடர் பால் நிறுத்தம், கறவை மாடுகளுடன் ரோடு மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.இதுதொடர்பான மனுக்கள் கலெக்டர் சங்கீதா, ஆவின் பொது மேலாளர் சிவகாமி, துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம் ஆகியோருக்கு சங்கங்கள் சார்பில் அளிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை