உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் உயிர் உரங்கள் தயாரிப்பு

குன்றத்தில் உயிர் உரங்கள் தயாரிப்பு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாணக் கொல்லிகள் தயாரித்து விற்கப்படுகின்றன.தோட்டக்கலை உதவி இயக்குனர் கோகிலா சக்தி கூறியதாவது: அங்கக வேளாண்மையில் உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சானக் கொல்லிகளின் பயன்பாடு முக்கியமானது. நீடித்த நிலையான வேளாண்மைக்கு ரசாயனங்களை தவிர்த்து உயிர் உரங்களை பயன்படுத்துதல் அவசியமாகியுள்ளது. மண்ணில் உள்ள சத்துக்களை மேம்படுத்தவும் நோய் கட்டுப்பாட்டுக்காகவும் அங்கக வேளாண்மையின் ஒரு அம்சமாக அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களும் டிரைகோடெர்மா விரிடி, பேசில்லஸ் போன்ற உயிர் பூஞ்சை கொல்லிகளும் பயன்படுத்தலாம். இம்மையத்தில் உயிர் உரங்களும், உயிர் பூஞ்சை கொல்லிகளும் விற்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் 89460 57834ல் விபரம் அறியலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ