மேலும் செய்திகள்
உழவரை தேடி முகாம்
08-Aug-2025
மதுரை: அரசுத் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையும் வகையில் மாதத்தில் 2வது, 4வது வெள்ளிக்கிழமைகளில் கிராமங்களில் உழவரைத் தேடி முகாம் நடத்தப்படுகிறது. வேளாண் துறை இணை இயக்குநர் முருகேசன் கூறுகையில்,''மதுரையில் உள்ள 13 வட்டாரங்களில் இதுவரை 162 கிராமங்களில் முகாம் நடத்தப்பட்டுள்ளது. நேற்று 32 கிராமங்களில் நடந்த முகாம்களில் பெண் விவசாயிகள் உட்பட 1018 பேர் பயன்பெற்றனர். அவர்களிடம் இருந்து விவசாயம் சார்ந்த மனுக்கள் பெறப்பட்டன'' என்றார்.
08-Aug-2025